Sorting by

×

திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சபரிமலையில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் துல்லபள்ளி அருகே சாலையின் வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக பேருந்து கவிழ்ந்துள்ளது.

அந்த பேருந்தில் இரு குழந்தைகள் உள்பட 12 பேர் பயணித்ததாகவும், விபத்தில் பேருந்தில் பயணித்த 3 வயது சிறுவன் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேருந்தை ஓட்டுநர் அதிவேகத்தில் இயக்கியதே விபத்துக்கான காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *