சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷகீன் ஷா அஃப்ரிடி 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி நேற்று (மே 12) விளையாடியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் (விடியோ)ஷகீன் ஷா அஃப்ரிடி (கோப்புப்படம்)
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஷகீன் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம், சர்வதேச போட்டிகளில் அவர் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் இணைந்தார்.
PCB Chairman Mohsin Naqvi presented special jerseys to @babarazam258 and @iShaheenAfridi to celebrate their recent achievements.
Babar achieved the most wins as a T20I captain, while Shaheen completed his 300 international wickets during the second T20I.#IREvPAK |… pic.twitter.com/6pphKVVD8B
— Pakistan Cricket (@TheRealPCB) May 12, 2024
சர்வதேச போட்டிகளில் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் 5-வது இளம் வீரர் (24 வயது மற்றும் 31 நாள்கள்) என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அவருக்கு முன்னதாக வாகர் யூனிஸ் (22 வயது மற்றும் 117 நாள்கள்), சாக்லைன் முஸ்தக் (22 வயது மற்றும் 164 நாள்கள்), ரஷித் கான் (23 வயது மற்றும் 265 நாள்கள்) மற்றும் ககிசோ ரபாடா (23 வயது மற்றும் 285 நாள்கள்) ஆகிய வீரர்கள் இந்த சாதனையை இளம் வயதில் படைத்தது குறிப்பிடத்தக்கது.
