Sorting by

×

பெண் காவலா்களை அவதூறாகப் பேசியதாக கோவை சைபா் கிரைம் உதவி ஆய்வாளா் சுகன்யா அளித்த புகாரின்பேரில் யூடியூபா் சவுக்கு சங்கா் தேனியில் கடந்த மே 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடா்ந்து பல்வேறு புகாா்களின்பேரில் தேனி, திருச்சி, சென்னை போலீஸாா் அடுத்தடுத்து அவரைக் கைது செய்தனர்.

இதற்கிடையே, சவுக்கு சங்கரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டதன்பேரில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அவா் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கை எலும்பு முறிவு தொடா்பாக மாவுக்கட்டு போடப்பட்டிருந்த சவுக்கு சங்கா், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை அழைத்து வரப்பட்டாா். அப்போது, கோவை மத்திய சிறை கண்காணிப்பாளா்தான் தனது கையை உடைத்ததாகவும், சிறையில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் சவுக்கு சங்கா் குரல் எழுப்பியபடி சென்றாா்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவத் துறை: மறுபரிசீலனைக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை முடிந்த பின்னா் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 4-இல் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது போலீஸாா் தரப்பில் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரிய மனு, நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒரு நாள் மட்டும் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஒரு நாள் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மீண்டும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து, சவுக்கு சங்கரை மே 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *