முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கு முன்னதாக பாலிவுட் நடிகை சாரா அலிகானின் நடன நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 18-ஆவது சீசன் கடந்த 22 ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் மும்பையை வீழ்த்திய நிலையில், இரண்டாவது போட்டியில் இன்று பெங்களூருவை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், வருகிற மார்ச் 30 ஆம் தேதி அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டியில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கு முன்னதாக திடலில் மாலை 6.30 மணியளவில் நடிகை சாரா அலிகானின் நடன நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு முன்னதாக இசையமைப்பாளர் அனிருத் நிகழ்ச்சியும், ஹைதராபாத் – லக்னௌ போட்டியில் இசையமைப்பாளர் தமன் இன்னிசை நிகழ்ச்சியும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Cricket meets glamour in Guwahati ✨
Sara Ali Khan is all set to set the stage on fire as #TATAIPL celebrates 18 iconic years!
Get ready for a night of music, dance & pure adrenaline! #RRvCSK pic.twitter.com/2KPtLcCodP
— IndianPremierLeague (@IPL) March 28, 2025
இதையும் படிக்க: எதிரணியில் விராட் கோலி இருந்தால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது! -ருதுராஜ்
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
