சிங்கப்பூர் நாட்டின் பிரதமராக லாரன்ஸ் வாங் இன்று (மே. 15) பதவியேற்றுள்ளார்.
சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்கு பின் புதிதாக ஒரு அரசியல் தலைவர் உயர்பதவிக்கு வந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக பிரதமராக இருந்த 72 வயதான லீ ஸியன் லூங் வயது முதிர்வால் பிரதமர் பதவியை விட்டு விலகியதைத் தொடர்ந்து 51 வயதான லாரன்ஸ் வாங் அந்நாட்டின் 4-வது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Warmest congratulations @LawrenceWongST on assuming office as Prime Minister of Singapore. I look forward to working closely with you to further advance our Strategic Partnership. pic.twitter.com/SVQVI6AB6n
— Narendra Modi (@narendramodi) May 15, 2024
இந்த நிலையில், சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்றுள்ள லாரன்ஸ் வாங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். லாரன்ஸ் வாங்குடன் நெருங்கிப் பணியாற்ற எதிர்பார்த்திருப்பதாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
