Sorting by

×

சென்னை: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொத்தம் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 2-ம் தேதி வரையிலும் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbse.gov.in, cbseresults.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *