சென்னை: 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்கள் சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் விதிகள் நாளை (ஜூன் 1) முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் புதிய ஓட்டுநர் உரிம விதிகள் ஜூன் 1-ம் தேதி முதல்அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் எளிமைப்படுத்தப்படும். மேலும், புகை வெளியீடு விதிகளை கடுமையாக்கி, அதிக புகையை வெளியிடும் 9 லட்சம் பழைய அரசு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
