Sorting by

×

பிகாரில் உள்ள 40 தொகுதிகளில் ஒன்றான, சீதாமர்ஹியில் நடைபெற்ற பிரசாரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா, ’சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்’ என வாக்குறுதி அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, பிகாரின் சீதாமர்ஹியில் நடந்த பிரசாரத்தில் பாஜக அமைச்சர் அமித் ஷா உரையற்றினார். பிகாரில் உள்ள 40 தொகுதிகளில் ஒன்றான சீதாமர்ஹி, மே 20-இல் மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

பிரசாரத்தில் அமித் ஷா, “ராமர் கோயிலிலிருந்து தங்களை விலக்கி வைத்தவர்கள், இதைச் செய்ய முடியாது; ஆனால் அன்னை சீதையின் கோயிலைக் கட்ட முடிந்தால், அது நரேந்திர மோடியாலோ, பாஜகவாலோதான் முடியும்” என்று அமித் ஷா கூறினார்.

#WATCH | Union Home Minister Amit Shah at his public meeting in Bihar’s Sitamarhi says, “We, the BJP don’t get scared of the ‘vote bank’. PM Modi has built the temple of Ram Lalla in Ayodhya now the work that is left is to build a great memorial at the birthplace of Ma Sita.… pic.twitter.com/nQJACKef9v

— ANI (@ANI) May 16, 2024

வாக்கு வங்கிக்கு பாஜக பயப்படவில்லை; பிரதமர் மோடி அயோத்தியில் ராமருக்காகக் கோவிலைக் கட்டினார், இப்போது, அன்னை சீதாவிற்காக, பெரிய நினைவுச்சின்னத்தைக் கட்டப்போகிறோம்” என்று கூறினார்.

“லாலு யாதவ், அதிகார அரசியலுக்காக, தனது மகனை முதலமைச்சராக்க, காங்கிரஸ் கட்சியின் பக்கம் அமர்ந்துள்ளார்” என்று அவர் கூறினார்.

மேலும், “பிகாருக்கு ’விகாஸ்ராஜ்(வளர்ச்சியளிப்பவர்) தான் தேவை; காட்டாட்சியல்ல” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *