பாஜக மூத்த தலைவரும், பிகாா் மாநில முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமாா் மோடி (72) திங்கள்கிழமை இரவு காலமானாா்.
இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘முன்னாள் துணை முதல்வரும், பிகாரின் மூத்த தலைவருமான சுஷில் மோடியின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களது கொள்கைகள் வேறுபட்டவை, ஆனால், ஜனநாயகத்தில், தேசிய நலன் முதன்மையானது. அவர் ஜிஎஸ்டி கவுன்சிலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
बिहार के पूर्व उपमुख्यमंत्री व वरिष्ठ नेता, श्री सुशील मोदी जी के निधन पर उनके परिवारजनों व समर्थकों के प्रति गहरी संवेदनाएँ।
हमारी विचारधारा अलग थी, पर लोकतंत्र में देश हित सर्वोपरि होता है। उन्होंने GST कॉउंसिल में अपना महत्वपूर्ण योगदान दिया था।
ईश्वर दिवंगत आत्मा को शांति…
— Mallikarjun Kharge (@kharge) May 14, 2024
மேலும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சுஷில் மோடியின் துக்கமான மறைவு பற்றி இன்று அதிகாலையில் படித்தேன், 70-களின் மத்தியில் பிகாரில் ஜேபி இயக்கத்தில் புகழ்பெற்ற அவரும், நானும் முற்றிலும் எதிரெதிரான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். எங்களது கொள்கைகளும் எதிரெதிரானவை. ஆனால், பல ஆண்டுகளாக எங்கள் தனிப்பட்ட நட்பைப் பகிர்ந்து கொள்வதற்கு அது தடையாக இல்லை.
Early this morning, I read about the sad demise of Sushil Modi, the former Deputy CM of Bihar, a former Rajya Sabha MP, and a distinguished product of the JP Movement in Bihar during the mid-70s He and I belonged to diametrically opposed political ideologies, but that had not…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) May 14, 2024
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சில காலம் மாநில நிதியமைச்சர் கவுன்சில் தலைவராக அவர் இருந்தார். பிரணாப் முகர்ஜி மற்றும் ப.சிதம்பரம் ஆகிய இருவருடனும் பணியாற்றினார்.
மாநிலங்களவையில் அவர் ஆற்றிய உரைகள் மிகுந்த கவனத்துடன் கேட்கப்பட்டன. அரசியல் எதிரிகள் மீதான அவரது விமர்சனங்கள்கூட கண்ணியமானவை’ என அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதை கடந்த மாதம் (ஏப்ரல்.3) எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தாா். இதனால், அவா் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ளவில்லை.
पिछले 6 माह से कैंसर से संघर्ष कर रहा हूँ । अब लगा कि लोगों को बताने का समय आ गया है । लोक सभा चुनाव में कुछ कर नहीं पाऊँगा ।
PM को सब कुछ बता दिया है ।
देश, बिहार और पार्टी का सदा आभार और सदैव समर्पित |
— Sushil Kumar Modi (मोदी का परिवार ) (@SushilModi) April 3, 2024
