Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran
செங்கல்பட்டு: கல்பாக்கம் அருகே வாயலூரில் கார் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கூவத்தூரிலிந்து ஒரே காரில் 5 பேர் சென்னை நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று வந்து கொண்டிருந்தனர். அவர்கள் கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த ஒரு மரத்தின் மீது கார் வேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதை பார்த்த மக்கள் ஓடி வந்து காரிலிருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களை வெளியில் மீட்க முடியவில்லை.
இதையடுத்து வெல்டிங் கடை வைத்திருப்பவர்களின் உதவியுடன் காரை வெல்டிங் மிஷன் மூலம் வெட்டி எடுத்து காரில் சிக்கியவர்களை மக்கள் மீட்டனர். இதில் 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து தெரியவந்தது. கவலைக்கிடமான நிலையில் இருந்த 2 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், 5 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இறந்தவர்கள் ராஜேஷ் 25, ஏழுமலை 26, விக்கி 25 என்பதும் தெரியவந்தது.
நண்பர்களான இவர்கள் குட்டி பாண்டிச்சேரி என்று அழைக்கப்படும் கூவத்தூரில் கள்ளு குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் காரை ஓட்டி வந்தபோது விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். கார் ஓட்டுனர் சரவணன், ஜெய்பினிதா மற்றும் அவரது மகன்கள் விஷால், பைசல் ஆகியோர் உயிரிழந்தனர்.
The post செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.