Sorting by

×

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சொலிசிட்டர் ஜெனரல் வேறு வழக்கில் ஆஜரானதால் வழக்கை ஒத்திவைக்க அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த வழக்கை நாளை விசாரிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அமலாக்கத்துறை தரப்பு வாதங்களைக் கேட்காமல் வழக்கை விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *