Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran
புதுடெல்லி: செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இன்று விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை விவகாரத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபஸ் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‘‘ஜிஎஸ்டி தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன் ஆஜராக வேண்டி இருப்பதால் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அமலாக்கத்துறை கோரிக்கைக்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த வழக்கை நாளை (இன்று) ஒத்திவைக்கிறோம். அப்போது இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்த உத்தரவு ஆகியவை தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.
The post செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் இன்று விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
The post செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் இன்று விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
