Sorting by

×

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 முதல் 2016 வரை அதிமுக-வில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத்துறை ஆள்சேர்ப்பில் விண்ணப்பதாரர்களிடம் பணம் வாங்கிய குற்றச்சாட்டில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டில் செந்தில் பாலாஜிக்கு எதிராக 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல்செய்தது.

செந்தில் பாலாஜி – அமலாக்கத்துறை

இந்த வழக்கில், கடந்த 8 மாதங்களாக ஜாமீன் கோரிவரும் செந்தில் பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றம் என இரண்டிலுமே சாதகமான தீர்ப்பு எதுவும் கிடைக்காததால், இடைக்கால ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மே 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை ஒத்திவைக்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை வைக்கவே அதன்படி மே 15-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அவரின் உடல்நிலையைக் கரணம் காட்டி இடைக்கால ஜாமீன் வழங்குங்குமாறு கோரிக்கை வைத்தார். அதற்கு அமலாக்கத்துறை தரப்போ, `மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது. அது இந்த வழக்கில் ஆதாரங்களை அவர் அழிப்பதற்குச் சாதகமாகிவிடும்’ என எதிர்த்தது.

உச்ச நீதிமன்றம்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.எஸ்.ஓகா, `சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பல வழக்குகளைக் காண்கிறோம். இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளாக சிறையிலிருப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே, 300 நாள்களுக்கு மேலாக சிறையிலிருந்திருக்கிறார் என்ற காரணத்துக்காக இதில் முன்னுரிமை அளிக்க முடியாது’ என வாய்மொழியாகக் கூறி விசாரணையை அடுத்தநாளுக்கு ஒத்திவைத்தார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவு

அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகியிருப்பதால், கால அவகாசம் அளிக்குமாறு அமலாக்கத்துறை தரப்பு கோரிக்கை விடுத்தது. கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்ற அமர்வு ஜூலை 10-ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தது.

கோடை விடுமுறையை முன்னிட்டு மே 17-ம் தேதி (நாளை) மூடப்படும் நீதிமன்றம் ஜூலை 8-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

‘ஜெயிலில் இருந்தபடி இயக்குகிறாரா செந்தில்பாலாஜி?’ – அண்ணாமலை குற்றச்சாட்டும், பின்னணியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *