Sorting by

×

சென்னையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வெப்பத்தை தணிக்கும் வகையில் வியாழக்கிழமை காலை முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கடந்த மூன்று 3 மாதங்களாக வெயில் வாட்டிவதைத்த சூழலில் சென்னையில் வியாழக்கிழமை காலை முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நுங்கம்பாக்கம், எழும்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

What we are seeing is just trailer show. Main picture is yet to start for Tamil Nadu as the UAC is going to linger near TN coast for next 5 days.

Super days are ahead for TN.

Chennai sunny start today will again change to awesome climate, so do carry your raincoat today too.

— Tamil Nadu Weatherman (@praddy06) May 17, 2024

இந்த நிலையில், இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சென்னையில் இன்றும் மழை பெய்யும், அதனால் ரெயின் கோட்டை எடுத்துச் செல்ல மறுக்காதீர்கள்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழையுண்டு, நீங்கள் தற்போது பார்ப்பது வெறும் டிரைலர்தான், மெயின் பிட்சர் காத்திருக்கிறது. ” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *