சென்னை: சுபமுகூர்த்தம், வார இறுதிநாட்களையொட்டி சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து இன்று (வெள்ளி கிழமை) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: மே 18,19 தேதிகள் வார இறுதி நாட்கள் என்பதுடன் சுபமுகூர்த்தமும் சேர்ந்து வருவதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
