சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவதற்கு கடந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலித்து உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள், மண்டல வாரியாக அனுமதி பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கடந்த 3 நாட்களில் 2,300 பேர் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்காக அனுமதி கோரி சென்னை மாநகராட்சியில் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலித்து அவர்களுக்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
