ஜம்மு- பூஞ்ச் நெடுஞ்சாலையில் 150 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக பிரதமர் அலுவலகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இது குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், அக்னூரில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்கள் குறித்து வேதனையடைவதாகவும் அவர்களை இழந்தவர்கள் உடன் நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்து
காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி!
Anguished by the loss of lives due to a bus mishap in Akhnoor. My thoughts are with those who have lost their loved ones. I pray that the injured recover soon.
Rs. 2 lakh would be given to the next of kin of each deceased due to the bus mishap. The injured would be given Rs.…
— PMO India (@PMOIndia) May 30, 2024
விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் காயமுற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவியாக அளிக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்து
ஆன்மிக சுற்றுலாவுக்காக வந்த பயணிகளின் பேருந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாகவும் பலர் காயமுற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
