Sorting by

×

ரிசர்வ் வங்கியின் வங்கிகளுக்கான விடுமுறை நாள்கள் குறித்த அறிவிப்பின்படி ஜூன் மாதத்தில் 10 நாள்கள் வங்கிகள் இயங்காது.

மாநிலங்களுக்கான பிரத்யேக விடுமுறைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட 10 நாள்கள் இந்த மாதத்தில் விடுமுறை நாள்களாக உள்ளன.

மாற்றுமுறை ஆவணங்கள் சட்டத்தின்படி மத்திய ரிசர்வ் வங்கி ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைக்கான விடுமுறை மற்றும் வங்கிகள் கணக்கு முடிக்கும் நாள்கள் ஆகியவற்றுக்காக விடுமுறை நாள்களை வரையறுக்கிறது. அதன்படி ஜூன் மாதத்தில் விடுமுறை நாள்கள் ( சில விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும்) பின்வருமாறு:

ஜூன் 1: சிம்லாவில் உள்ள வங்கிகள் தேர்தலின் இறுதி கட்டம் என்பதால் இயங்காது

ஜூன் 15: மிசோரம் மற்றும் ஒடிசாவில் பிராந்திய விழாக்களை முன்னிட்டு வங்கிகளுக்கான விடுமுறை நாள்

ஜூன் 17: இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் பக்ரீத் முன்னிட்டு விடுமுறை (மிசோரம், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் தவிர)

ஜூன் 18: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் பக்ரீத் முன்னிட்டு விடுமுறை

இவை தவிர்த்து பின்வரும் வார இறுதி நாள்களில் வங்கிகள் இயங்காது.

ஜூன் 8: இரண்டாவது சனிக்கிழமை

ஜூன் 9,16: ஞாயிற்றுக்கிழமை

ஜூன் 22: நான்காவது சனிக்கிழமை

ஜூன் 23,30: ஞாயிற்றுக்கிழமைகள்

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *