Sorting by

×

நாடாளுமன்றத் தேர்தலில், ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதற்கிடையில், மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில், “நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம், ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தது.

ராகுல் காந்தி

இந்த நிலையில், நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,“இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் ஒவ்வொரு குடும்பப் பெண்ணும், ஜூலை 1-ம் தேதி தங்கள் வங்கிக் கணக்குகளில் ஒரு மேஜிக் நிகழ்ந்திருப்பதைப் பார்ப்பீர்கள். ஒவ்வொரு ஏழைப் பெண்ணின் கணக்கிலும், ரூ. 8,500 டெபாசிட் செய்யப்பட்டிருக்கும்.

இது ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் நடக்கும். இந்தத் தொகை தொடர்ந்து வரும். இந்தியாவிலிருந்து வறுமையை அகற்ற அனைத்து வகையிலும் கடுமையாகப் போராடுவோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ராகுல் காந்தியின் பிரசாரத்துக்குப் பதிலளித்த பிரதமர் மோடி,“ராகுல் காந்தி ஷாஹி ஜாதுகர் (அரச மந்திரவாதி). அவர் வறுமையை அகற்றும் கருத்து மூலம் நாட்டையே திகைக்க வைத்திருக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள்; இந்த தேர்தலுக்குப் பிறகு மோடியால் பிரதமராக முடியாது!” – ராகுல் காந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *