Sorting by

×

சட்டமன்றத் தேர்தலுக்கான 234 தொகுதிகளுக்குமான தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று வெளியிடவிருக்கிறார். இந்நிலையில், ‘டார்கெட் தலைநகரம்’ என்கிற முடிவோடு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் சென்னைக்குள்ளேயே இறங்கவிருப்பதாக கூறுகின்றனர் தவெகவினர்.

த.வெ.க - விஜய்
TVK – Vijay

சென்னையில் களமிறங்கும் தவெக வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல் இங்கே :

பெரம்பூர் – விஜய்

வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜூனா

ஆயிரம் விளக்கு – ஜே.சி.டி பிரபாகர்

விருகம்பாக்கம் – சபரிநாதன்

எழும்பர் (தனி) – ராஜ்மோகன்

வேளச்சேரி – கிறிஸ்டி பிரித்திவி

ஆர்.கே.நகர் – மரிய வில்சன்

கொளத்தூர் – வி.எஸ்.பாபு

சேப்பாக்கம் – டி.செல்வம்

துறைமுகம் – சினோரா அசோக்

மயிலாப்பூர் – வெங்கட்ராமன்

தி.நகர் – புஸ்ஸி ஆனந்த்

TVK Vijay - விஜய்
TVK Vijay – விஜய்

அண்ணா நகர் – ராம்குமார்

சோழிங்கநல்லூர் – ஈ.சி.ஆர்.சரவணன்

ராயபுரம் – கோகுல்

திரு.வி.க நகர் (தனி) – பல்லவி

தவெக தலைவர் விஜய் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், விஜய் தான் போட்டியிட பெரம்பூர் தொகுதியை டிக் அடித்திருக்கிறார். பெரம்பூரில் கணிசமாக இருக்கும் சிறுபான்மையினரின் ஓட்டும் சிட்டிங் எம்.எல்.ஏ மற்றும் திமுக வேட்பாளரான ஆர்.டி.சேகர் மீதான அதிருப்தி விஜய்க்கு கைகொடுக்கும் என தவெக தரப்பு நம்புகிறது.

மேலும், அதிமுக இந்த தொகுதியில் நிற்காமல் பாமகவுக்கு தொகுதியை கொடுத்திருப்பதையும் தங்களுக்கு சாதகமான அம்சமாக பார்க்கின்றனர் தவெகவினர். பெரம்பூருக்கு பக்கத்து தொகுதியான வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜூனா களமிறங்குகிறார். திமுக சார்பில் வில்லிவாக்கத்தில் அண்ணாநகர் கார்த்தி களமிறங்குகிறார். ஆதவ்வும் கார்த்தியும் ஒரு காலத்தில் ஐபாக்குடன் இணைந்து திமுகவுக்காக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.கே.நகரில் தவெக சார்பில் போட்டியிடும் மரிய வில்சன் கடந்த 15 நாட்களாக தொகுதியிலேயே சுற்றி வந்து வீடு வீடாக பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.

Aadhav Arjuna
Aadhav Arjuna

நான்கு நாட்களுக்கு முன்பு எழும்பூரில் பொதுக்கூட்டம் நடத்தி ராஜ் மோகனும் வேலைகளை தொடங்கிவிட்டார். அதிமுக – பாஜக வலுவாக இருக்கும் தி.நகர் தொகுதியில் பொதுச்செயலாளர் ஆனந்த் களமிறங்குகிறார். தொகுதியில் ஒன்றிரண்டு நாட்கள் வேலை பார்த்த ஆனந்த், தொகுதி மாறலாமா என்ற யோசனைக்கும் சென்றிருக்கிறார். ஆனந்த் போட்டியிடும் தொகுதியில் கடைசி நிமிட மாற்றம் இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை. மாவட்டச் செயலாளர்களில் ஈ.சி.ஆர் சரவணனுக்கும் விருகம்பாக்கம் சபரிக்கும் திரு.வி.க நகர் பல்லவிக்கும் மட்டுமே சீட் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.

துறைமுகம் தொகுதியை கைப்பற்ற 2-3 கோஷ்டி இடையே கடும் மோதல் நிலவியது. இறுதியில் ஆதவ் சிபாரிசோடு கட்சிக்குள் வந்த முன்னாள் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் அசோக்கிற்கு தொகுதி கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்து அதிமுகவிலிருந்து வந்த வி.எஸ்.பாபுவுக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. வடசென்னை ஏரியா முழுவதும் இவரின் அனுபவம் தவெகவுக்கு உதவும் என நம்புகின்றனர். உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதியில் சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகி தவெகவில் இணைந்த டி.செல்வம் வேட்பாளராகிறார். சேப்பாக்கத்திற்கான வேட்பாளரை தேர்வு செய்யத்தான் தவெக முகாம் அதிக நாட்களை எடுத்துக் கொண்டதாக கிசுகிசுக்கின்றனர்.

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த், விஜய்

சென்னையில் திமுக வலுவாக இருப்பதால், இங்கே கட்சியின் முக்கியஸ்தர்கள் எல்லாரும் களமிறங்கி களத்தை திமுக vs தவெக என மாற்ற வேண்டுமென்று முடிவெடுத்திருப்பதாக கட்சியின் வியூக வட்டாரத்தினர் கூறுகின்றனர். மேலும், தவெக சார்பில் எடுக்கப்பட்ட பல சர்வேக்களும் சென்னையில் கட்சிக்கு கணிசமான செல்வாக்கு இருப்பதாக காட்டுவதாகவும் கூறுகின்றனர். அதனால்தான் கட்சியின் முக்கியஸ்தர்கள் அத்தனை பேரும் சென்னையை மொய்க்கிறார்களாம்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *