மும்பை: அமெரிக்க டாலர் குறியீட்டெண் பலவீனம் மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நேர்மறையான தாக்கம் உள்ளிட்ட காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்த அளவிலிருந்து 7 காசுகள் உயர்ந்து ரூ.88.28 ஆக நிறைவடைந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.39ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.42 ஐ தொட்ட நிலையில், முடிவில் 7 காசுகள் உயர்ந்து ரூ.88.28-ஆக முடிவடைந்தது.
நேற்று (வியாழக்கிழமை) இந்திய ரூபாய் மதிப்பு 24 காசுகள் சரிந்து, அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.88.35 என்ற குறைந்த அளவில் முடிவடைந்தது.
இதையும் படிக்க: சென்செக்ஸ் 356 புள்ளிகளும், நிஃப்டி 25,100 புள்ளிகளுக்கு மேலே சென்று நிறைவு!
The Indian rupee recovered from all-time lows and settled for the day higher by 7 paise at 88.28 against the US dollar on Friday.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
