Sorting by

×

தமிழகத்தின் பண்டைய வரலாற்றையும், சிந்துவெளி நாகரிகத்துடனான அதன் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் பறைசாற்றும் வகையில், தொல்லியல் துறையில் ஒரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு அகழாய்வுத் தளங்களில் கண்டறியப்பட்ட மட்பாண்டக் குறியீடுகளை ஆவணப்படுத்தி, அவற்றை இணையச் செயலியாக மாற்றும் பிரம்மாண்டத் திட்டம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தொல்லியல் தளங்களில் கண்டறியப்படும் மட்பாண்ட ஓடுகளில் காணப்படும் கீறல் குறியீடுகள், தமிழி (தமிழ்-பிராமி) மற்றும் சிந்துவெளி எழுத்துகளுடன் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டுள்ளன.

மண்பாண்ட குறியீடுகள்
மண்பாண்ட குறியீடுகள்

தொடக்க கால எழுத்து முறைகளின் பரிணாம வளர்ச்சியையும், தமிழர்களின் பண்பாட்டு வேர்களையும் புரிந்துகொள்வதில் இந்தக் குறியீடுகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. இதனை உலகறியச் செய்யும் நோக்கில், ‘Documentation and Digitization of Graffiti and Tamili Inscribed Potsherds of Tamil Nadu’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை (TNSDA) மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (RMRL) இணைந்து இத்தொகுப்பை உருவாக்கியுள்ளன.

இந்த இணையச் செயலியில் 53 இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டதில் கிடைத்த 9,486 உறுதிசெய்யப்பட்ட கீறல் தரவுகள், 42 அடிப்படைக் குறியீடுகள் (Base signs), 544 மாற்று வடிவங்கள் (Variants), 1,521 கூட்டு வடிவங்கள் (Composites) என அனைத்து தரவுகளும் அறிவியல்பூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Graffiti Marks
Graffiti Marks

ஒவ்வொரு தனித் தனிக் குறியீடுகள், அவை எங்கு கண்டெடுக்கப்பட்டது? அந்தக் குறியீட்டின் பொருள் என்ன? என்பதுபோன்ற பல்வேறு தகவல்கள் அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இந்த ஆய்வு தொடர்பான தகவல்கள் மற்றும் நூல்கள் tamildigitallibrary.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், தமிழகத்தின் தொன்மை வரலாற்றை உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் தங்களின் விரல் நுனியில் காண முடியும்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *