Sorting by

×

Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran

சங்ககிரி: ஈரோடு மாவட்டம், பெரியசேமூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா(48). அரசு பஸ் டிரைவரான இவர் நேற்று அதிகாலை 5.50 மணிக்கு, ஈரோடு பஸ் ஸ்டாண்டிலிருந்து 22 பயணிகளை ஏற்றிக் கொண்டு, சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காலை 6.30 மணிக்கு, சங்ககிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, டிரைவர் செந்தில்ராஜா திடீரென மயக்கமடைந்துள்ளார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். மயக்கமடைந்த செந்தில்ராஜாவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
The post டிரைவர் மயக்கம்; தடுப்புச்சுவரில் மோதிய அரசு பஸ் appeared first on Dinakaran.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *