Sorting by

×

டி20 உலகக் கோப்பைக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தலைமையிலான 15 பேர் கொண்ட வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 14) அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பைக்கான அணிகளை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் அண்மையில் அறிவித்தன.

இம்பாக்ட் பிளேயர் விதிமுறைக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தலைமையிலான 15 பேர் கொண்ட வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 14) அறிவித்துள்ளது.

Bangladesh Squad | ICC Men’s T20 World Cup West Indies & USA 2024 #BCB #Cricket #T20WorldCup 2024 pic.twitter.com/GKJ89MzeLL

— Bangladesh Cricket (@BCBtigers) May 14, 2024

டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி விவரம்

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), டஸ்கின் அகமது (துணைக் கேப்டன்), லிட்டன் தாஸ், சௌமியா சர்கார், தன்சித் தமீம், ஷகிப் அல் ஹசன், தௌகித் ஹிரிடாய், மஹ்மதுல்லா, ஜேக்கர் அலி, தன்வீர் இஸ்லாம், மஹேதி ஹாசன், ரிஸாத் ஹொசைன், முஸ்தபிசூர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் தன்சிம் ஷகிப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *