Sorting by

×

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி, ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் முடிவடைந்து, ஒரே வாரத்தில் டி20 உலகக் கோப்பைத் தொடங்கவுள்ளதால் உலகக் கோப்பைக்குத் தயாராவதற்கான நேரம் இந்தியா உள்பட அனைத்து அணிகளுக்குமே குறைவாக உள்ளது.

ரிஷப் பந்த்தின் அதிரடி டி20 உலகக் கோப்பையிலும் தொடருமா?

ஐசிசி நடத்தும் தொடர்களுக்கு முன்பாக அதில் பங்கேற்கும் அணிகள் இரண்டு பயிற்சியாட்டங்களில் விளையாடுவது வழக்கம். ஆனால், அணிகளுக்கு போதிய நேரமின்மை காரணத்தால் இந்த முறை ஒரு பயிற்சியாட்டம் மட்டுமே நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி விளையாடும் முதல் 3 போட்டிகள் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள நியூயார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதே மைதானத்தில் வருகிற ஜூன் 1 ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி பயிற்சியாட்டத்தில் விளையாடும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *