Sorting by

×

‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது, ஆனால்.!’ – காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து ஸ்டாலின்

‘India Today’ ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார்.

அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று காங்கிரஸுக்கும் நன்றாக தெரியும். திமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடரும்.

ஸ்டாலின், ராகுல் காந்தி
ஸ்டாலின், ராகுல் காந்தி

மற்றவர்கள் நினைப்பது நடக்காது. அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னை ஒரு சகோதரனாகப் பார்க்கிறார். நானும் அவரை அப்படி தான் பார்க்கிறேன்.

எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் தேர்தலில் திமுக தான் வெல்லும். அரசியலில் களம் புகுந்ததில் இருந்து உழைத்து வருகிறேன். யார் காலிலும் விழந்து முன்னேறக் கூடாது.

உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கைக்கொடுப்போம் என்று கலைஞர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்” என்று பேசியிருக்கிறார்.

இதன் மூலம் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை என்பதை ஸ்டாலின் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *