வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பெண்களால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் வெள்ளாளப்பட்டியில் தன்னுடைய எம்.பி நிதியின் மூலம் கட்டப்பட்ட திருமண மண்டத்தைத் திறந்து வைக்க வந்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரும் ஊழல்கள் நடந்துள்ளன.
நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்த ஊழல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆட்சி முடிய உள்ள நிலையிலும் 12 நாட்களில் ரூ. 4,355 கோடி மதிப்பிலான பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் திமுக ஆட்சியில் மட்டும் ரூ. 4 லட்சத்து 96 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டைக்கு இதுவரை 3 முறை ரிப்பன் வெட்டி திறப்பு விழா நடத்தியுள்ளனர். ஆனால், ஒரு தொழிற்சாலை கூட இதுவரை தொடங்கப்படவில்லை. தருமபுரி மாவட்டத்தை திமுக அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது.
திமுக கூட்டணி குழப்பத்தில் இருக்கிறது. அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் பெண்களால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
