Sorting by

×

“தவெகவினர் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினோமா? நடந்தது இதுதான்”- அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

துறைமுகம் தொகுதியில் கருத்துக்கணிப்புக்காக சென்ற தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டிருந்தனர்.

இந்த தாக்குதலில் அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள்தான் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதனிடையே கருத்துக்கணிப்பு கேட்கச் சென்ற தவெகவினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆதவ் அர்ஜுனாவும் நேற்று (பிப். 10) குற்றம்சாட்டியிருந்தார்.

ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜூனா

இந்நிலையில் இன்று (பிப். 11) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபுவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், ” பொதுமக்களுக்கும் தவெகவினருக்கும்தான் சண்டை. பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

அவர்கள் சொல்வதை மட்டும் வெளிப்படுத்தக் கூடாது. உண்மை நிலையை களத்திற்கு சென்று விசாரியுங்கள்.

எப்படி பனையூரில் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறதோ…அதே போன்ற மோதல் தான் தற்போது நடந்திருக்கிறது. தீர விசாரித்து மக்களுக்கு உண்மையை தெரிவியுங்கள்” என்று சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *