Sorting by

×

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

5 தொகுதிகளிலும் அந்தக் கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தாமரை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பேசியிருக்கிறார்.

“சைக்கிள் சின்னம் கிடைக்காததால் கூட்டணியில் இருக்கக்கூடிய பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன்.

ஜி.கே வாசன்
ஜி.கே வாசன்

நான் இந்தக் கட்சியை ஆரம்பித்த பிறகு 4, 5 தேர்தல்களில் போட்டியிட்டேன். முதல் தேர்தலில் தோப்பு சின்னம், இரண்டாவது தேர்தலில் ஆட்டோ சின்னம், மூன்றாவது தேர்தலில் இரட்டை இலை சின்னம், நான்காவது தேர்தலில் நாங்கள் விரும்பும் சைக்கிள் சின்னம் ஆகியவற்றில் போட்டியிட்டிருக்கிறேன்.

சின்னங்கள் மாறிக்கொண்டே இருந்தாலும் களப்பணி முக்கியம், கூட்டணியின் பலமும் முக்கியம். அதனை உணர்ந்துதான் செயல்படுகிறோம்.

அதிமுக தமிழகத்தின் முதல் கட்சி, பாஜக இந்தியாவின் முதல் கட்சி இந்த இரண்டு கட்சியுடனும் நாங்கள் கூட்டணியில் இருக்கும்போது, டபிள் என்ஜின் சர்கார் என்று கூறப்படும்பொழுது நல்ல அரசை அமைக்கக்கூடிய சின்னமாக நாங்கள் இந்தச் சின்னங்களை கருதுகிறோம்.

அதன் அடிப்படையில்தான் நாங்கள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

ஜி.கே வாசன்
ஜி.கே வாசன்

தொடர்ந்து தாமரை சின்னத்தில் போட்டியிடுவதால் கட்சியில் சிலருக்கு அதிருப்தி இருக்கிறதா என்ற கேள்விக்கு, “என்னுடைய கட்சியில் சிலருக்கு அதிருப்தி இருக்கிறது.

அது நியாயமான அதிருப்திதான். ஒருவர் கட்சிப் பணிக்காக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என நினைக்க கூடிய நேரம் தேர்தல்தான்” என்று தெரிவித்திருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *