Sorting by

×

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த கையோடு தென் மாவட்டங்களில்  சுற்றுப்பயண பிரசாரம் செய்வதற்காக கிளம்பியிருக்கிறார்.

’ஓபிஎஸ்ஸின் கூடாரம் காலியாகி விட்டது, அவருடன் யாரும் இல்லை’ என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் திமுகவோ, ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்ப ஒரு மெகா பிளானை உருவாக்கி அதை சாத்தியப்படுத்த அவரை களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள்.

திமுக கொடுத்திருக்கும் இந்த அசைன்மெண்ட்டை ஓ.பன்னீர்செல்வம் வெற்றிகரமாக செய்தால் மட்டுமே கட்சிக்குள் அவருடைய வளர்ச்சி இருக்கும் என்கிறார்கள் திமுகவினர்.

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்

இது குறித்து நம்மிடையே பேசிய சீனியர் திமுக நிர்வாகிகள், “ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து வெளியே வந்ததும் முக்குலத்தோர் சமூகங்களே அவருக்கு ஆதரவாக நின்றது. இதனாலேயே கடந்த முறை தென் மாவட்டங்களில் அதிகளவு தொகுதிகளில் அதிமுகவால் வெற்றி பெற முடியாமல் போனது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவருடைய செயல்பாடுகளினால் அதிருப்தியடைந்த அவருடைய ஆதரவாளர்கள் மாற்று கட்சிகளில் இணைந்து விட்டனர். சொற்ப எண்ணிகையிலான ஆட்களை சேர்த்து கொண்டே திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்!

டி.டி.வி.தினகரன், ஒ.பன்னீர்செல்வம், சசிகலா

தென் மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் ஓட்டுகளை பெறுவதற்காக அனைத்து கட்சிகளும் வியூகம் வகுக்க தொடங்கியிருக்கின்றன.

குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், டிடிவி தினகரன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி, பாஜக என எல்லோருமே முக்குலத்தோர் சமூகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவும் முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் தான் திமுக தலைமையும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என கறாராக கட்சி நிர்வாகிகளிடம் சொல்லியிருக்கிறது.

இதற்கு ஓபிஎஸ்ஸின் அரசியல் அனுபவமும், அவர் சார்ந்திருக்கும் சமூக வாக்குகளும் உதவும் என்பதாலேயே கட்சியில் இணைத்து கொண்டு, திமுகவிற்காக பிரச்சாரம் செய்ய அனுப்பியிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின்

மறுபுறம் ஓபிஎஸ் மீது இருக்கும் அதிருப்தியிலும், ஆதங்கத்திலும் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தை சமாதானப்படுத்த வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. திரும்பவும் தன்னுடைய செல்வாக்கை உயர்த்தினால் மட்டுமே நீண்ட காலம் அரசியலில் இருக்க முடியும் என்பதால் இந்த தேர்தல் திமுக – அதிமுக போட்டியை தாண்டி தன்னுடைய செல்வாக்கை மீட்டெடுப்பதற்கான தேர்தலாகவும் இருக்கும் என ஓ.பி.எஸ் நம்புகிறார்

இதற்காக, தென் மாவட்டம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.  இந்த பயணத்தின்போது முக்குலத்தோர் சமுதாய தலைவர்களையும் சந்தித்து அவர்களை திமுகவிற்கு வாக்களிக்க வைக்க வேண்டும் என்பது தான் திமுக தலைமை கொடுத்திருக்கும் அசைன்மெண்ட்.

 ஓபிஎஸ் பிரச்சாரம் செய்வதற்கான  ஏற்பாடுகள் முழுவதையும் அந்ததந்த திமுக நிர்வாகிகள் செய்து தர வேண்டும் என தலைமை  உத்தரவு போட்டிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

தற்போது வரை தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். தொடர்ந்து முதுகுளத்தூர், பரமகுடி, திருவாடானை, தேனி ஆகிய பகுதிகளில் நிர்வாகிகளை சந்திக்க இருக்கிறார்” என்றனர் விரிவாக.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *