இந்தியாவில் தேசத் தந்தை மகாத்மா காந்தியைப் பற்றி ஒரு திரைப்படம் எடுக்கும் வரை யாருக்கும் அவரைத் தெரியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் களத்தில் பிரதமர் மோடி பேசுகின்ற ஒவ்வொரு பேச்சும் பெரும் சர்ச்சையாகவும், கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
இந்த நிலையில், தொலைக்காட்சி ஊடகத்துக்குப் பிரதமர் மோடி அளித்த நேர்காணல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைராலாகியிருக்கிறது. ஆனால் அந்த நேர்காணல் எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
அந்த நேர்காணலில் தேச விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அகிம்சை வழியில் போராடிய காந்தி குறித்து மோடி கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தில்லியில் 122 டிகிரி வெயில் கொளுத்தும்: வானிலை மையம் கொடுத்த அதிர்ச்சி
நேர்காணலில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது..
மகாத்மா காந்தி ஒரு சிறந்த இந்தியர். ஆனால் அவரைப் பற்றி உலகம் அறியவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு கடந்த 75 ஆண்டுகளில், இந்திய அரசியல் தலைவர்கள், மகாத்மா காந்தியைப் பற்றி உலகம் அறிந்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.
மகாத்மா காந்தியின் உலகளாவிய அங்கீகாரம் அவரது வாழ்க்கை மற்றும் அவரது கொள்கைகள் அனைத்தும் திரைப்பட சித்தரிப்புகளால் குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் ஒரு மோசமான நிலை இருந்தது. மகாத்மா காந்தியின் “காந்தி” என்ற திரைப்படம் எடுக்காமல் இருந்திருந்தால் மகாத்மா காந்தியைப் பற்றி யாருக்குமே தெரிந்திருக்காது. அதன்பிறகே அவரைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் உலகில் ஏற்பட்டது. ஆனால் அந்த படத்தை நாம் எடுக்கவில்லை.
பிரதமர் மோடி வெல்வாரா? ரஜினி பதில்!
மார்டின் லூதர் கிங்கும், நெல்சன் மண்டேலாவையும் பற்றி உலகம் முழுவதும் அறிந்திருக்கிறது. காந்தி அவர்களை விடக் குறைந்தவர் அல்ல. உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்ட பிறகு இதைச் சொல்கிறேன். மகாத்மா காந்தி இந்தியாவில் பலவித பிரச்னைகளுக்கு தீர்வாக இருந்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
மகாத்மா காந்தியின் சுயசரிதை 1982ல் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் 20ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கால ஆட்சியிலிருந்து இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய நபராக இருந்த மகாத்மா காந்தியின் வாழ்க்கையை விவரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
