தில்லியில் பட்டாசுகள் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தேசியத் தலைநகரான தில்லியில் பட்டாசு தயாரிக்க, விற்க, சேமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கக் கோரி பட்டாசு ஆலைகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் பூயான் கொண்ட அமர்வு, மக்கள் தொகையில் பெரும்பாலானோர் தெருக்களில் வேலை செய்கின்றனர். அவர்கள் அதிகளவு காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
இதில், பட்டாசு தடையால் காற்றை மாசுபடுத்தும் நுண் துகள்கள் 30% குறைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அறிக்கையை நீதிமன்ற ஆலோசாகர் அபராஜிதா சிங் சுட்டிக்காட்டினார்.
”உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களிடம் காற்று சுத்திகரிப்பு செய்யும் வசதிகள் உள்ளன. ஆனால் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களிடம் அதுபோன்ற சாதனங்கள் இல்லை. குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர் காற்று மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்” என அபராஜிதா சிங் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பட்டாசுகள் மாசுபாட்டை ஏற்படுத்துவதாக மத்திய அரசின் அறிக்கை குறிப்பிடுகிறது. எனவே, இதுவே இந்தப் பிரச்னைக்கு முடிவாகும் என்று நீதிமன்றம் கூறியது.
தில்லியில் பட்டாசு வெடிப்பது, கழிவுகளை எரிப்பது, வாகன புகைகள், தொழிற்சாலை மாசுபாடுகள் உள்ளிட்ட காற்றை மாசுபடுத்தும் காரணிகள் தொடர்பான எம்சி மேத்தா வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்த நிலையில் பட்டாசுகள் மீதானத் தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக நடைபெற்ற விசாரணையில் காற்று மாசுபாட்டு அளவைக் கட்டுப்படுத்த தில்லி அரசும், அதிகாரிகளும் தவறியதற்கு அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம் பட்டாசு தடையை அமல்படுத்த தில்லி அரசும், காவல்துறையினரும் எடுத்த நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பியது.
மேலும், ”தில்லி அரசும், துறை சார்ந்த அதிகாரிகளும் அரசும் பட்டாசுகளுக்கு நிரந்தரமாக தடை விதிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்” என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.
இதையும் படிக்க | தர்பூசணி வாங்கலாமா? கூடாதா? வெடித்தது சர்ச்சை
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI