Sorting by

×

துணை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது.

17வது துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிராவின் ஆளுநரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர்.

சி.பி.ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன்

இந்தத் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்றது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், மொத்தமுள்ள 781 வாக்குகளில் வெற்றிபெற தேவையான 391 வாக்குகளை விட 61 வாக்குகள் கூடுதலாகப் பெற்று 452 வாக்குகளுடன் வெற்றி பெற்றிருக்கிறார்.

பதவியேற்பு விழா

இதன் மூலம் சி.பி.ராதாகிருஷ்ணன் (67) தமிழகத்திலிருந்து மூன்றாவது துணைக் குடியரசுத் தலைவராகியிருக்கிறார்.

இந்நிலையில் துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்க சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார்.

விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, ஹமீத் அன்சாரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும் இவ்விழாவில் பங்கேற்றிருந்தார்.

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *