Sorting by

×

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப்போகிறார் என்ற பேச்சுக்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பிலிருந்தே திமுக அமைச்சர்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும், இதுபற்றிய பேச்சுகள் எழும்போதெல்லாம், `இதுபற்றி முதல்வர்தான் முடிவெடுப்பார்’ என உதயநிதியும், `கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை’, `அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது’ என ஸ்டாலினும் மறுக்காமல் கூறிவந்தனர்.

உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்

இவ்வாறான சூழலில், அமைச்சரவை மாற்றத்துக்கான முதல்வரின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகையிலிருந்து அறிக்கை ஒன்று நேற்று வெளியானது. அந்த அறிக்கையில், அமைச்சரவையிலிருந்து மூன்று பேர் வெளியேற்றம், நான்கு பேர் சேர்ப்பு மற்றும் 6 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் போன்றவை இடம்பெற்றிருந்தது.

Udhayanidhi Stalin: துணை முதல்வர் உதயநிதி- பதவியிழக்கும் 3 பேர்; யாருக்கு என்ன துறை? – முழு விவரம்

குறிப்பாக, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி, சிறையிலிருந்து நிபந்தனை ஜாமீனில் வெளிவந்திருக்கும் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி உள்ளிட்டவை அதில் இருந்தது. மேலும், உதயநிதி உட்பட மற்ற அமைச்சர்களின் பதவியேற்பு விழா செப்டம்பர் 29-ம் பிற்பகல் 3:30 மணியளவில் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆளுநர் ஆர்.என். ரவி – முதல்வர் ஸ்டாலின்

அதன்படி, ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் ராஜ்பவனில் இன்று பிற்பகல் 3:30 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. இதில், முதல்வர் ஸ்டாலின், அவரின் மனைவி மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரின் மனைவி, மகள் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின்

மேலும், வைகோ, திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர். தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்குப் பின்னர், ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கத் தொடங்கினர்.

செந்தில் பாலாஜி, கோவி.செழியன், நாசர், ராஜேந்திரன்

அதைத்தொடர்ந்து, இரா. ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, கோவி.செழியன், சா.மு. நாசர் ஆகியோர் அடுத்தடுத்து அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இதில், இரா. ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறையும், செந்தில் பாலாஜிக்கு அவர் ஏற்கெனவே பதவி வகித்த மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையும், கோவி.செழியனுக்கு உயர் கல்வித்துறையும், சா.மு. நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Udhayanidhi Stalin: “வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் விமர்சிக்கட்டும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *