Sorting by

×

“தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலமாவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது” என்று மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி 2026 தேர்தலை முன்னிட்டு மூன்றாவது முறையாக தமிழகம் வர இருக்கிறார்.

கடந்த ஜனவரி மாத இறுதியில் பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க தலைவர் அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் முதன்முறையாக ஒன்றாக பங்கேற்றனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி
தேசிய ஜனநாயகக் கூட்டணி

பின்னர் 2-வது முறையாக புதுச்சேரி மற்றும் மதுரையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

இதனிடையே மூன்றாவது முறையாக நாளை (மார்ச். 11) மாலை திருச்சியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்க இருக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ” தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலம் அடைந்து வருவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது.

திமுகவின் தவறான நிர்வாகத்தையும், நிறைவேற்றாத வாக்குறுதிகளையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அதனால் தான் தேசிய ஜனநாயக்கூட்டணி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

திருச்சியில் நாளை மாலை நடைபெறும் தேசிய ஜனநாயக் கூட்டணி கூட்டத்தில் தமிழக தலைவர்களுடன் நானும் இணைகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *