Sorting by

×

ஆந்திர பிரதேசத்தில் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. சந்திரகிரி தொகுதி தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் மீது செவ்வாய்க்கிழமை திருப்பதியில் மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெளடிகளை ஏவிவிட்டதாக ஒய்எஸ்ஆர் கட்சி மீது தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் புலிவர்த்தி வெங்கட மணி பிரசாத், பத்மாவதி மஹிலா பல்கலைக்கழகத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை பார்வையிட்டு திரும்பி வரும் வழியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அவர் காயமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்துக்கு அருகே அவரின் காரை, மர்ம கும்பல் ஒன்று இரும்பு கம்பிகள் மற்றும் தடிகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. வேட்பாளரின் பாதுகாவலர்கள் உள்பட இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திர பிரதேசத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை முடிவுற்ற நிலையில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *