Sorting by

×

இஸ்ரேல் ராணுவம் லெபனானில் நள்ளிரவில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா ஆயுதக் குழு, வடக்கு இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு படை (ஐடிஎஃப்) வெளியிட்ட அறிக்கையில்,, லெபனானில் இருந்து 45 கணைகள் இஸ்ரேலின் வடக்குப் பகுதி நோக்கி ஏவப்பட்டதாகவும் அபாய ஒலி இயக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐடிஎஃப்பின் வான்வழி பாதுகாப்பு படை, பல கணைகளை இடைமறித்து தகர்த்துள்ளது. பின்னர் தெற்கு லெபனானில் ஐடிஎஃப் தாக்குதல் நடத்தியதாகவும் கணைகள் ஏவப்பட்ட தளத்தை குறிவைத்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.

ஹிஸ்புல்லா வீரர்கள், இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் நோக்கி 60-க்கும் அதிகமான கட்யுசா கணைகளை ஏவியதாக தெரிவித்துள்ளனர்.

கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நள்ளிரவில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரானிய ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

அக்.8 போர் தொடங்கியது முதல் லெபனான் – இஸ்ரேல் எல்லையில் ராணுவத்துக்கும் பயங்கரவாத குழுவுக்குமிடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *