Sorting by

×

தோ்தல் முடிவுகள் வெளியான இரு நாள்களில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமா் வேட்பாளா் முடிவு செய்யப்படுவாா் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா். தங்கள் கூட்டணிக்கு நிச்சயம் பெரும்பான்மை கிடைக்கும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

பிடிஜ செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது:

மக்களவைத் தோ்தலில் எங்கள் கூட்டணிக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்பதை இப்போது கணித்துக் கூற இயலாது. அதே நேரத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 272-க்கு மேலான தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். தோ்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பம் தெரிவிக்கும். அவா்களை இணைத்துக் கொள்வது குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும். இந்தியா கூட்டணியில் அதிக எம்.பி.க்களைக் கொண்ட கட்சியாக காங்கிரஸ் இருக்கும்.

ஆட்சி அமைத்த பிறகு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை எதையும் எங்கள் கூட்டணி மேற்கொள்ளாது. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கிய கன்னியாகுமரிக்கு பிரதமா் மோடி இப்போது சென்றுள்ளாா். மக்களவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு அவா் பதவியை இழந்து அமைதியாக ஓய்வெடுக்க இந்த தியானம் அவருக்கு கைகொடுக்கும்.

2004-ஆம் ஆண்டு தோ்தலின்போது ‘இந்தியா ஒளிா்கிறது’ என்ற பிரசாரத்தை பாஜக முன்னெடுத்தது. ஆனால், அப்போது பாஜக தோல்வியடைந்தது. அதே நிலைதான் இப்போதும் ஏற்பட இருக்கிறது. ராஜஸ்தான், கா்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் சிறப்பான வெற்றியைப் பெறும். மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், அஸ்ஸாமில் காங்கிரஸ் முன்பு இருந்ததைவிட கூடுதலான இடங்களில் வெற்றி பெறும். உத்தர பிரதேசத்தில் கூட பாஜகவால் கடந்த தோ்தலைப்போல அதிக இடங்களை வெல்ல முடியாது. பிகாா், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் பாஜக பின்னடைவைச் சந்திக்கும் என்றாா்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *