Sorting by

×

ஜிஎஸ்டி வருவாய் கடந்த மாதம் 8.5 சதவிகிதம் கூடுதலாக ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாயாக ரூ. 1.82 லட்சம் கோடி ஈட்டப்பட்டுள்ளது.

இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.34,141 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.43,047 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.91,828 கோடி, செஸ் வரி ரூ.13,253 கோடியாகும்.

முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இது 8.5 சதவிகிதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மூன்றாவது அதிகபட்ச ஜிஎஸ்டி வருவாயாகும்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் ரூ.2.10 லட்சம் கோடியும், கடந்த அக்டோபரில் ரூ.1.87 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபர் மாதம் விழாக் காலம் என்பதால் பொருள்களுக்கான தேவை உயா்ந்து, ஜிஎஸ்டி வசூல் அதிகரித்திருந்த நிலையில், கடந்த மாதம் ஜிஎஸ்டி வசூல் சற்று குறைந்துள்ளது.

நவம்பரில், உள்நாட்டு பரிவா்த்தனைகள் மீதான ஜிஎஸ்டி 9.4 சதவீதம் (அக்டோபரில் 10% ஆக இருந்தது) அதிகரித்து ரூ.1.40 லட்சம் கோடியாகவும், இறக்குமதிகள் மீதான ஜிஎஸ்டி 6 சதவீதம் (அக்டோபரில் 4% ஆக இருந்தது) அதிகரித்து ரூ. 42,591 கோடியாகவும் இருந்தது. இந்த மாதத்தில் திருப்பியளிக்கப்பட்ட தொகை ரூ.19,259 கோடியாகும்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *