Sorting by

×

ஒடிசா மாநிலம் பாலாசோரில் பா.ஜ.க-வின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி, ‘மோசடிகளை நிறுத்துவது சாத்தியமில்லை என்று பத்தாண்டுகளுக்கு முன்பு மக்கள் நினைத்தனர்.

பிரதமர் மோடி

ஆனால், கடந்த பத்தாண்டுகளில் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்திவருகிறோம். பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை விடுவித்திருக்கிறோம். வரவிருக்கும் ஐந்தாண்டுகளில், புதிய வளர்ச்சி, நம்பிக்கையை நாடு காணப்போகிறது’ என்று பா.ஜ.க அரசின் சாதனைகளாக பலவற்றை குறிப்பிட்டார்.

பா.ஜ.க அரசின் சாதனைகள் என்று அவர் பட்டியல் போட்டதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடல்நிலை குறித்து பேசியதுதான் கடும் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறது. பிரதமர் மோடி தனது உரையில், ‘கடந்த ஓராண்டு காலமாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை தொடர்ந்து மோசடைந்துவருகிறது. அவரால் எந்தவொரு வேலையையும் சுயமாக செய்ய முடியாது என்று அவருடன் பணிபுரிபவர்கள் கூறுகிறார்கள். இதற்கு பின்னால் சதி இருக்குமோ என்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள்’ என்றார் மோடி.

வி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக்

மேலும் மோடி பேசுகையில், `ஒடிசாவில் பா.ஜ.க வெற்றிபெற்றவுடன், ஒடிசாவைச் சேர்ந்த ஒருவரை மாநிலத்தின் முதல்வராகக் கொண்டுவருவோம். மேலும், நவீன் பட்நாயக் உடல்நிலை குறித்து விசாரிக்க ஜூன் 10-க்குப் பிறகு சிறப்புக் குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் அறிக்கை பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடப்படும்’ என்றார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடல்நிலை குறித்து இவ்வாறு பிரதமர் மோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐ.ஏ.எஸ் பணியில் இருந்தபோது முதல்வர் நவீன் பட்நாயக்கின் செயலாளராக இருந்து, விருப்ப ஓய்வுக்குப் பிறகு பிஜு ஜனதா தளம் கட்சியின் அதிகார மையத்தில் இருந்து செயல்பட்டுவருகிறார் வி.கே.பாண்டியன். நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் வி.கே.பாண்டியனைக் குறிவைத்தே பிரதமர் மோடி அப்படிப் பேசியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது.

நவீன் பட்நாயக்

77 வயதாகும் நவீன் பட்நாயக், வயது மூப்பு காரணமாக சில உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவருக்குப் பிறகு, பிஜு ஜனதா தளத்தின் தலைமைக்கு வி.கே.பாண்டியன் வரலாம் என்று சொல்லப்படும் நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் வி.கே.பாண்டியனைக் குறிவைத்து விமர்சித்துவருகிறார்கள்.

இதற்கு முன்பு, ‘பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ சாவி தமிழ்நாட்டுக்குப் போய்விட்டது’ என்று ஒடிசாவில் பிரதமர் மோடி பேசியது, வி.கே.பாண்டியனைக் குறிவைத்துத்தான் என்பது வெளிப்படையான ஒன்று. மோடியின் அந்தப் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தார்கள்.

மோடி, அமித்ஷா

தற்போது மீண்டும் வி.கே.பாண்டியன் குறிவைக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் விமர்சகர்கள், “கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க ஆட்சியில் நவீன் பட்நாயக்கின் ஆதரவோடுதான் பல மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள். பிஜு ஜனதா தளம் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இல்லையென்றாலும், பா.ஜ.க-வுக்கு அந்தக் கட்சி முழு ஆதரவை அளித்துவந்தது.

தமிழகத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்தது எப்படி?!

ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க பிஜு ஜனதா தளத்துடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தியது. பிஜு ஜனதா தளம் சார்பில் பா.ஜ.க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியவரே வி.கே.பாண்டியன்தான். தற்போது அவரை  பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குறிவைக்கிறார்கள். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடல் நிலை குறித்து மோடி பேசியது கண்டனத்துக்குரியது“ என்கிறார்கள்.

நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்

பிரதமர் மோடியின் பேச்சு கருத்து தெரிவித்திருக்கும் முதல்வர் நவீன் பட்நாயக், “என் உடல்நிலை குறித்து அவர் மிகவும் அக்கறை கொண்டிருந்தால், நான் அவருக்கு நல்ல நண்பர் என்றால், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் உடல்நிலை குறித்து விசாரித்திருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன். கடந்த ஒரு மாதமாக, தேர்தல் பிரசாரம் செய்துவருகிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக எனது உடல்நிலை குறித்து ஒடிசா பா.ஜ.க தலைவர்கள் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்” என்றும் நவீன் பட்நாயக் கூறியிருக்கிறார்.

மோடி – நவீன் பட்நாயக் ஒடிசா

“நவீன் பட்நாயக் கூற்றுப்படி பார்த்தால், பத்தாண்டுகளாக நவீன் பட்நாயக் உடல்நிலை குறித்து ஒடிசா பா.ஜ.க தலைவர்கள் கிளப்பி வந்த வதந்தியின் உச்சமாக இருக்கிறது பிரதமர் மோடியின் பேச்சு” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *