Sorting by

×

`நாங்கள் தயார், திமுக தயாரா? குழு அமைக்காதது வருத்தமே!’ – டெல்லியில் செல்வப்பெருந்தகை பேட்டி

டெல்லியில் இன்று (பிப்.10) காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ தொகுதி பங்கீடு குறித்து பேச முதல்வர் ஸ்டாலின் உடனே குழுவை அமைக்க வேண்டும்.

விரைவில் தேர்தல் உடன்பாட்டை முடிக்க வேண்டும். பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை செய்ய எங்களுக்கு உரிய நேரம் தேவை.

கடைசி நேரத்தில் அறிவித்தால் குழப்பம் தான் வரும்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

பிஹார், ராஜஸ்தான், மாராட்டியத்தில் கடைசி நேரத்தில் முடிவெடுத்ததால் தான் சங்கடமானது.

இந்த அனுபவங்களை வைத்து முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.

திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும்.

திமுக பேச்சுவார்த்தையைத் தாமதப்படுத்துவதால் தொண்டர்கள் மத்தியில் வருத்தம் உள்ளது.

ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோரின் பயணத்திட்டங்கள் தயாராக இருக்கிறது. நாங்களும் தயாராக இருக்கிறோம். திமுக தயாராக இருக்கிறதா?

ராகுல் காந்தியுடன் பேசப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் நாளை கூறுவோம்.

ஸ்டாலின், செல்வப்பெருந்தகை
ஸ்டாலின், செல்வப்பெருந்தகை

குழப்பம் எங்களிடம் இல்லை. நாங்கள் தயாராகத் தான் இருக்கிறோம். திமுக குழு அமைக்காமல் இருப்பது வருத்தத்தை தருகிறது என்று எல்லோரும் ஆலோசனைக் கூட்டத்தில் பகிர்ந்தனர்” என ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *