சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
“திமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேறுசில கட்சிகளை இணைக்க திட்டம் இருக்கிறது என்றும் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரவால் தொகுதிகளை தியாகம் செய்ய வேண்டும் என்றும் திமுக கூறியது.

5 தொகுதிகளை தராவிட்டால் 4 தொகுதிகளையாவது தர வேண்டுமென்று கேட்டுள்ளோம். கடந்த முறை 3 தொகுதிகளை தந்த திமுக இம்முறை 2 தொகுதிகளை அளிக்க முன்வந்துள்ளது.
தொகுதி பங்கீடு தொடர்பாக மற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு மீண்டும் அழைப்பு வரும்.
போட்டியிட சின்னம் சார்ந்து எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுக்கு ஏணி சின்னம் இருக்கிறது. எங்களை பொறுத்தவரை சின்னம் பிரச்னை இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
