காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,
“விஜய் NDA கூட்டணியில் சேருவாரா என்பது எனக்கு தெரியாது. தெரியாமல் கருத்து கூற முடியாது. தி.மு.க தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். ஆனால், விஜய் NDA கூட்டணியில் சேராத நிலையில் அது குறித்து கருத்து கூற முடியாது. தி.மு.க -காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் வராது. ஏற்கனவே, கூட்டணி முடிவு செய்யப்பட்டு, எத்தனை தொகுதிகள் என்பது இறுதி செய்யப்பட்டு விட்டது. எனவே, மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. கோவையில் காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து கேட்கிறீர்கள். இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நடக்கிறது. ஆனால், தமிழகத்தில் நடந்த அந்த சம்பவம் பெரும் கண்டனத்திற்குரியது. இந்த ஒரு சம்பவத்தை வைத்து தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரி இல்லை என்று கூறக்கூடாது.

நான் எம்.ஜி.ஆர் காலத்தில் அ.தி.மு.க-வில் அமைச்சராக இருந்தேன். பா.ஜ.க-வில் மத்திய மந்திரி ஆக இருந்தேன். எனக்கு எம்.எல்.ஏ ஆக விருப்பமில்லை. ஆனாலும் ,காங்கிரஸ் தலைமை, தொண்டர்கள் விரும்பினால் போட்டியிடுவேன். எனது மகன் ராமச்சந்திரன் ஏற்கனவே அறந்தாங்கி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அந்த தொகுதி காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டால் மீண்டும் அதே தொகுதியில் ராமச்சந்திரன் போட்டியிட வாய்ப்பு உள்ளது” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
