Sorting by

×

சென்னை: நாய் கடித்ததால் பலத்த காயமடைந்த சிறுமிக்கு நாய்களின் உரிமையாளரும், தமிழக அரசும் உதவ வேண்டும் என்று தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை 4-வது லேன் பகுதியிலுள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளி மற்றும் பராமரிப்பாளராக வேலை செய்து வருபவர் விழுப்புரத்தை சேர்ந்த ரகு. மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுரக்‌ஷாவுடன் பூங்காவிலேயே வசித்து வருகிறார்.

கடந்த 5-ம் தேதி இரவு சிறுமி சுராக்‌ஷாவை பூங்காவின் எதிர் வீட்டில் புகழேந்தி என்பவரால் வளர்க்கப்பட்ட 2நாய்கள் கடித்து குதறியது.பலத்தகாயமடைந்த சிறுமிக்கு ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோமருத்துவமனையில் கடந்த 9-ம் தேதிபிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *