விண்வெளி குறித்து ஆராய்ச்சி செய்ய 2032-ல் நிலவுக்கு செயற்கை கோள் ஊர்தியை அனுப்பவுள்ளதாகவும் 2045-ல் செவ்வாய் கோளில் தென்கொரிய கொடியை நாட்டவுள்ளதாகவும் அந்நாட்டின் அதிபர் யூன் சுக் யோல் தெரிவித்துள்ளார்.
தென்கொரியா தலைநகர் சியோலுக்கு 300 கிமீ தொலைவில் உள்ள நகரான சச்சியோனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரிய விண்வெளி மையத்தை திறந்து வைத்து பேசிய அதிபர் 2045 இலக்கிற்காக 72.5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசளவில் விண்வெளி ஆராய்ச்சி போட்டியில் தென்கொரியாவின் இடத்தை தக்கவைக்க விண்வெளி மற்றும் அதுசார்ந்த துறைகளில் பட்ஜெட்டை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2027-ல் 1.5 லட்சம் கோடி வொன் (கொரிய பண மதிப்பு) அளவுக்கு முதலீட்டை அதிகரிக்கவுள்ளதாகவும் 100 லட்சம் கோடி முதலீட்டை 2045-க்குள் கவரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளிசார் ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்க வேண்டியுள்ளதை வலியுறுத்திய அதிபர், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மே 27-ம் தேதியை விண்வெளி நாளாக அரசு அறிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு தென்கொரியா 200 டன் கொண்ட நுரியை (கேஎஸ்எல்வி-2) மூன்றாவது முறையாக வெற்றிகரமாக ஏவி, 8 செயற்கை கோள்களை சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தியது.
டிசம்பர் மற்றும் ஏப்ரலில் வடகொரியாவை கண்காணிக்க இரண்டு உளவு செயற்கை கோள்களை ஸ்பேஸ்எக்ஸ் ஏவுகணை மூலம் தென்கொரியா அனுப்பியது.
கொரிய தீபகற்பத்தின் முழு கண்காணிப்பை ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் உறுதி செய்ய 2025-க்குள் 5 உளவு செயற்கை கோள்களையும் 2030-க்குள் 60 சிறிய மற்றும் நுண் செயற்கை கோள்களையும் தென்கொரியா ஏவவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
