நீடாமங்கலம் அருகே டிராக்டரால் மோதி பெண் கொல்லப்பட்டரா என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
நீடாமங்கலம் அருகேயுள்ளது சோணாப்பேட்டை. இந்த கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சிவாஜி (55). மற்றும் காந்தி. இவா்களுக்கிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை காந்தி தனது டிராக்டரை சிவாஜி வீட்டை நோக்கி வேகமாக ஓட்டிச் சென்று வீட்டில் இருந்தவா்களிடம் பணத்தைக் கேட்டு தகராறு செய்துள்ளாா். மேலும், டிராக்டரை கொண்டு அங்கு நின்றிருந்த காரில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் காரின் அருகில் நின்றிருந்த சிவாஜியின் மனைவி இந்துமதி (45) மீதும் டிராக்டா் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸாா் சடலத்தை கூறாய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, டிராக்டரை கொண்டு மோதி இந்துமதி கொல்லப்பட்டரா என்று விசாரித்து வருகின்றனா்.
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அஸ்வின்ஆண்டோஆரோக்கியராஜ் ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
