ஈரான் மீது போர் தொடுத்துள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும்.
இன்று காலையில் இருந்து தொடர்ந்து வருகிறது இந்தப் போர்.
ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் அலுவலகம், அணு ஆயுத பகுதிகள், ஈரானின் தலைநகரம் டெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றன இரு நாடுகளும்.

இப்போது வெளியாகி உள்ள தகவலின் படி, ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்சாதே மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி முகமது பாக்பூர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்கின்றன சில ஊடகங்கள்.
ஆனால், இந்தத் தகவல்களை ஈரான் ஊடகம் எதுவும் உறுதி செய்யவில்லை.
ஈரானின் உச்ச தலைவர் காமேனியும் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியான நிலையில்
, இந்தத் தகவலை இஸ்ரேலின் சேனல் 12 மறுத்துள்ளது. காமேனிக்கு சிறிதளவு காயம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது.
இன்னும் சிறிது நேரத்தில் காமேனியின் பேச்சு ஒளிபரப்பப்படலாம் என்றும், அது முன்னரே ரெக்கார்ட் செய்யப்பட்டதாக இருக்கும் என்றும் சேனல் 12 தெரிவித்துள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
