சென்னை: “பத்திரப்பதிவு கட்டணத்தையும் உயர்த்தி, வழிகாட்டி மதிப்பையும் உயர்த்தி, உயர் நீதிமன்ற தீர்ப்பையே மதிக்காமல் செயல்படும் திமுக அரசு, இத்தனை அதிகமான கட்டணச் சுமையை பொதுமக்கள் மீது திணிப்பதன் பின்னணி திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் வருமானத்துக்குமானதே அன்றி, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து திமுகவுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மாதம் ஒரு முறை, தமிழக மக்களின் மீது ஏதோ ஒரு வகையில் கட்டண உயர்வை சுமத்தி வரும் திமுக அரசு, தற்போது பத்திரப்பதிவு கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது. மே 8, 2024 தேதியிட்ட அரசாணையின்படி, ரூ.5-ஆக இருந்த கட்டணம் ரூ.500-ஆகவும், ரூ.30-ஆக இருந்த கட்டணம் ரூ.1,000-ஆகவும் என 26 வகையான சேவைகளுக்கான பத்திரப்பதிவு கட்டண உயர்வை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு பல மடங்கு உயர்த்தியிருக்கிறது திமுக அரசு.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
