Sorting by

×

நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் அரசு பேருந்துகள் மோசமான நிலையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மழை நேரங்களில் பேருந்தின் மேல்கூரை ஒழுகியதால் பேருந்துக்குள் பயணிகள் குடைப்பிடித்தபடி சென்ற பல சம்பவங்களை பார்த்திருக்கிறோம். பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து நடு வழியில் பழுதாகி நின்ற நிலையில் அதை பயணிகளே பின்னாளிருந்து தள்ளும் நிகழ்வை கேள்விப்பட்டிருக்கிறோம்.

நடுவழியில் நிற்கும் அரசு பேருந்து

அரசு பேருந்து ஒன்று பின்பக்க கண்ணாடி இல்லாமல் சென்றதும், மற்றொரு பேருந்தில் செல்லும் வழியில் படிக்கட்டு தனியாக கழண்டு விழுந்த நிகழ்வும் நடந்துள்ளது. இவை அரசுப்பேருந்து குறித்து வரும் விமர்சனத்தை உண்மை என சொல்லவைக்கும் சம்பவங்களாக இருகின்றன. இந்நிலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் நகரப்பேருந்துகள் பெரும்பாலும் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. பயன்பாட்டுக்கு தகுதியில்லாத அந்த பேருந்துகளை பழுது பார்த்து பயன்படுத்தி வருகின்றனர். அதனாலேயே இது போன்ற சப்வங்கள் நடப்பதாக புகார் வாசிக்கிறார்கள்.

இந்நிலையில் மாயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நேற்று அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் இடது பக்க டயர் கழன்று பேருந்துக்கு முன்னால் ஓடியுள்ளது. இதைபார்த்த டிரைவர் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக பயணிகள் அனைவரும் பயத்தில் அலறினர். ஆனால் பேருந்து டிரவைர் பதற்றப்படாமல் சாதுர்யமாக பேருந்தை ஓட்டி சாலையோரத்தில் நிறுத்தி பயணிகளை பாதுகாத்தார்.

முன் பக்க டயர் கழண்டு ஓடிய அரசு பேருந்து

சீர்காழியிலிருந்து வடரங்கம் நோக்கி சென்ற A8 என்ற எண் கொண்ட அரசு நகரப் பேருந்தில் தான் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. பணகாட்டாங்குடி பகுதியில் பேருந்து சென்றுக் கொண்டிருந்த போது முன்பக்க டயர் தனியாக பேருந்துக்கு முன்னால் ஓடியுள்ளது. நல்ல வேலையாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. அரசு ஏழை மக்கள் பயன்படுத்தகூடிய பேருந்துகளின் நிலை மோசமாக உள்ளது. இதில் அலட்சியம் காட்டாமல் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *