Sorting by

×

2021-ம் ஆண்டு பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி உறுதி செய்தது. இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ராஜேஷ் தாஸ் | பாலியல் தொல்லை வழக்கு

அந்த மனுவை கடந்த மாதம் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில், மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி தலைமையிலான அமர்வு, ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் ராஜேஷ் தாஸ் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

“அது அவரது அனுமானம்..!” – அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ED மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *